ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கடந்த 20 ஆண்டுகளில் 7ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக நேற்று (நவ.16) பதவியேற்றார். தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இப்படி, பிகார் மாநில முதலமைச்சராக 4-வது முறையாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 7-வது முறையாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது.
நம்பர் ’7’ஆல் தான் நிதிஷ்குமாரின் மாநில அளவிலான சாதனை வாய்த்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவருடைய லக்கி நம்பர் ’7’ இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா.
- நிதிஷ்குமார் கார் எண் 777
- நிதிஷ்குமார் அரசியலுக்குள் பிரவேசித்த ஆண்டு 1977
- நிதிஷ்குமார், யுவ லோக் தளத்தில் தலைவராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1987. இதன் பின்னராக அவருடைய அரசியல் வாழ்க்கை பல திருப்புமுனைகளைக் கண்டது.
- நிதிஷ்குமார் தான் ’7 நிஷ்யா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். அடடே! இங்கேயும் அவர் லக்கி நம்பரை சேர்க்க மறக்கவில்லை.
- ஜூலை 27, 2017இல் என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை இணைத்த அவர், இக்கூட்டணியில் பல வெற்றிகளையும் கண்டார்.
- தற்போது, நிதிஷ்குமார் 17ஆவது சட்டப்பேரவையில் முதலமைச்சராகியுள்ளார். பிகார் மாநிலத்தின் 37ஆவது முதலமைச்சர் என்ற பெருமையையும் அவர் தன் வசப்படுத்தியுள்ளார்.
இதையும் பாருங்களேன்:பிகார் முதலமைச்சராக பதவியேற்கும் நிதிஷ் குமார்