கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திவால் சட்டத்தில் 7 திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா சட்டமானால், அது வாராக்கடன்களை விரைவாக தீர்க்கவும், 14 நாட்களுக்குள் திவால் விண்ணப்பம் ஏற்கப்படாதபோது, உரிய அலுவலர்கள் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தரவும், திவால் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 330 நாட்களுக்குள் செய்து முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.