எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில், தற்போது மானியமில்லாத சமையல் சிலிண்டர்களுக்கான விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் 753 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சிலிண்டரின் சிலை தற்போது 652 ரூபாயாக குறைந்துள்ளது.
சிலிண்டர்கள் விலை குறைப்பு! - மானியமில்லாத சமையல் சிலிண்டர்
டெல்லி: நேற்று நள்ளிரவு முதல் மானியமில்லாத சமையல் சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்கள் விலை குறைப்பு!
சென்னையில் மானியத்துடன் கூடிய சமையல் சிலிண்டரின் விலை 3 ரூபாய் 02 காசுகள் குறைந்து 482 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல், வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டர் விலை 178 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ. 1,249க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.