இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக 76 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு - இந்திய தேர்தல்
டெல்லி: இந்தியா முழுவதும் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குறைந்தபட்சமாக 45.5 விழுக்காடும், அதிகபட்சமாக புதுசேரியில் 76.42 விழுக்காடு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், ஒரு சில இடங்களை தவிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வாக்குபதிவு அமைதியாக நடந்தது. முதல்கட்ட வாக்குபதிவில் 69.4 விழுக்காடு வாக்கு பதிவானது. இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 15.8 கோடி வாக்காளர்களில் பெண்கள் 7.8 கோடி, மாற்றுத்திறனாளிகள் 8.45 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.
அசாம் 76.22, மேற்கு வங்கம் 76.22, புதுச்சேரி 76.19, பீகார் 62.38, ஜம்மு-காஷ்மீர் 45.5, கர்நாடகா 67.67, மகாராஷ்டிரா 61.22, மணிப்பூர் 67.15, ஒடிசா 57.97, தமிழ்நாடு 66.36, உத்தரப்பிரதேசம் 66.06, சத்திஷ்கர் 71.40 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளது.