கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காயம் பாரம் ஏற்றிய லாரியை முகமது என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அர்ஷத் என்ற உதவியாளர் உடனிருந்தார். கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக லாரி சென்று கொண்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்ததில் லாரி நிலைதடுமாறி சாலையோர வனத்துறை குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முகமது, அர்ஷ்த் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், மீட்பு வாகனம் மூலம் இருவரையும் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த அர்ஷ்த்தை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.