தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிருஷ்ண ஜெயந்தி விழா: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கொண்டாடவுள்ள இஸ்கான்

டெல்லி: கிருஷ்ண ஜெயந்தி விழாவை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்த இஸ்கான் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி

By

Published : Aug 11, 2020, 9:49 PM IST

கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் முன்பிருந்தது போல் பிரமாண்டமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக விழாவை இந்தாண்டு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்த இஸ்கான் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் சஞ்சலபதி தாஸ் கூறுகையில், "பெருந்தொற்று காரணமாக நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. எங்களின் கோயிலுக்கு ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தியின் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் மக்களிடம் மகிழ்ச்சியை பரப்புவது எப்படி என யோசனை செய்துவருகிறோம். எனவே, அனைத்து தரப்பு வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். பக்தி, மதம் சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் இஸ்கான் ஈடுபடவில்லை. கலாசாரத்தை மையமாக வைத்தே இயங்கிவருகிறோம். இச்சூழலில், அதனை மீட்டெடுக்க இந்த விழா உதவும்" என்றார்.

இதையும் படிங்க: பிஎஸ்என்எல் ஊழியர்கள் குறித்து பாஜக எம்பி சர்ச்சை கருத்து

ABOUT THE AUTHOR

...view details