2019-20ஆம் ஆண்டில் மத்திய அரசு அலுவலர்களுக்கு எதிராக 245, பொதுத்துறை நிறுவனங்கள் தன்னாட்சி அமைப்புகள், சட்டம் மற்றும் நீதித்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக 200, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக 135 என மொத்தம் ஆயிரத்து 245 புகார்கள் வந்துள்ளன.
இதில் மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக 6, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார்களில் 220 மனுக்கள் கோரிக்கை, கருத்துகள், ஆலோசனைகள் அடங்கியதாக உள்ளன. 613 புகார்கள் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக உள்ளது.
மொத்தமுள்ள புகார்களில் ஆயிரத்து 347 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்து 152 புகார்கள் லோக்பால் விசாரணை வரம்புக்கு வெளியே உள்ளது. மேலும், 78 புகார்கள் முறையாக இல்லை என்று கூறப்பட்டு, மீண்டும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. 45 புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளவும், 32 புகார்களுக்கு விசாரணை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் லோக்பால் அமைப்பிடமிருந்து அனுப்பப்பட்ட புகார்களில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் 29 புகார்கள் கிடப்பில் உள்ளன. இதில் 25 புகார்கள் மீதான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறைக்கு 4, சிபிஐ அமைப்புக்கு 2 புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கோரப்பட்டுள்ளது.