மாநில அரசால் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா, தன்னாட்சி சுதந்திரத்துடன் செயல்படும் அதிகாரம் பெற்றது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தால் அமைக்கப்பட்ட லோக்ஆயுக்தா குழுவினர் நேற்று (சனிக்கிழமை) இரவு, இந்தூர் மேம்பாட்டு ஆணைய உதவி பொறியாளருக்குச் சொந்தமான எட்டு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
கட்டுக்கட்டாக சிக்கிய துட்டு! வேட்டையாடிய லோக் ஆயுக்தா
போபால்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் மேம்பாட்டு ஆணைய உதவி பொறியாளருக்கு சொந்தமான எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 35 லட்சம் ரூபாயை லோக்ஆயுக்தா குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லோக்ஆயுக்தா குழு அதிரடி சோதனை
இதில், 35 லட்சம் ரொக்கம், 1.35 கிலோ தங்கம், ஏழு கிலோ வெள்ளி, சொத்துப் பத்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
Last Updated : May 5, 2019, 11:15 AM IST