மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முகமாக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா, தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காரணத்தால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் மூவர் பாஜகவில் இணைந்தனர். மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவையொட்டி அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: கோட்டையை கைப்பற்றுமா காங்கிரஸ்? - மத்தியப் பிரதேசம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 107 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 87 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். குவாலியர் சம்பல் பகுதியில் உள்ள இரண்டு மூன்று தொகுதிகளில் மட்டுமே மும்முனை போட்டி நிலவிவருகிறது. மற்றப்படி பெரும்பாலான தொகுதிகளில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 355 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதைத்தவிர, குஜராத், உத்தரப் பிரதேசம், ஒடிசா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் 26 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதன் முடிவுகள், நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.