தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அழித்த காவல் துறை - மதுபானம் கடத்தல்

விஜயவாடா: தெலங்கானாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மசிலிபட்டிணம் காவல் துறையினர் அழித்தனர்.

liquor-worth-rs-72-lakh-destroyed-under-road-roller-in-andhra-pradesh
liquor-worth-rs-72-lakh-destroyed-under-road-roller-in-andhra-pradesh

By

Published : Jul 18, 2020, 8:53 AM IST

அண்டை மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் மணல் மற்றும் மதுபானம் தொடர்பாக ஆந்திர மாநில காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மே மாதத்தில் மணல் மற்றும் மதுபானங்கள் கடத்தலைத் தடுக்க மாநில அரசால் சிறப்பு அமலாக்கப் பிரிவு தொடங்கப்பட்டது.

இந்தப் பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை காவல் துறையினர் அழித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் பாபு பேசுகையில், ''கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி பகுதிகள் வழியாக வாகனங்களில் கடத்தி வரப்படும் மதுபானங்களைப் பிடிக்க தீவிரமாக சோதனை நடத்தி வந்தோம்.

ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அழித்த காவல் துறை

இதில் 14 ஆயிரம் மதுபான பாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து சட்டமுறைகளும் முடிவடைந்த பின்னரே இந்த மதுபானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மணல் மற்றும் மதுபானங்கள் கடத்தலைத் தடுக்க சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து, பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 300 முதல் 400 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:நீ சரக்க மட்டும் குடு தல... நாங்க டோக்கன போடுறோம் எங்க ஸ்டைல்ல...

ABOUT THE AUTHOR

...view details