தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு - தெலங்கானாவில் மதுக்கடைகள் திறப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் மதுபானங்களின் விலை 16 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

liqour shop  Telangana government  KCR  தெலங்கானாவில் மதுக்கடைகள் திறப்பு  மதுபானம், தெலங்கானா, சந்திரசேகர் ராவ், விலை அதிகரிப்பு
liqour shop Telangana government KCR தெலங்கானாவில் மதுக்கடைகள் திறப்பு மதுபானம், தெலங்கானா, சந்திரசேகர் ராவ், விலை அதிகரிப்பு

By

Published : May 6, 2020, 9:51 AM IST

Updated : May 6, 2020, 11:07 AM IST

தெலங்கானாவில் இன்று (மே6) முதல் மதுபானங்களின் விலை 16 விழுக்காடு வரை அதிகரிக்கிறது. இந்த முடிவு மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ், “மாநிலத்தில் சிவப்பு மண்டலங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மதுபான கடைகள் திறக்கப்படும்” என்று கூறினார்.

எனினும், “அதிதீவிர கட்டுப்பாடு மண்டலங்களில் மதுகடைகள் திறக்கப்படாது” என்றார். தெலங்கானாவில் இரண்டாயிரத்து 200 மதுபான கடைகள் உள்ளன. இதில் 15 கடைகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளன. தொடர்ந்து பேசிய ராவ், “மதுக்கடை வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகள் மீறப்படும்பட்சத்தில் கடைகள் உடனடியாக மூடப்படும்” என்றும் எச்சரித்தார்.

மேலும், “மதுகடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். முகக்கவசம் அணிந்துவரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க வேண்டும். அண்டை மாநிலங்களில் மதுகடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆகவே மாநிலத்திலும் மதுகடைகள் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் பதுக்கல், கடத்தலுக்கு வழிவகுக்கும்” என்றார்.

கரோனா நெருக்கடி முடக்கத்துக்கு பின்னர், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்கத் தடை கோரிய மனு தள்ளுபடி

Last Updated : May 6, 2020, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details