ஜம்மு காஷ்மீர், புட்காம் பகுதியில் ராணுவத்தினர், மாநில காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த ஐந்து பேரும் இம்ரான் ரஷீத், இஃப்ஷான் அஹ்மத் கனி, ஓவைஸ் அகமது, மொஹ்சின் காதிர் மற்றும் ஆபிட் ராதர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.