தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுத்தையின் பிடியில் நாய்: பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி! - Leopard attacks two stray dogs in Mumbai,

மும்பை: அந்தேரி புறநகர் பகுதியில் சிறுத்தை பாய்ந்து நாயை கவ்விப் பிடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cctv footage
சிசிடிவி

By

Published : Dec 10, 2019, 7:37 PM IST

மகாராஷ்டிராவில் அந்தேரி பகுதியில் சீப்ஸ் (SEEPZ) அருகே நாயை சிறுத்தை கவ்வும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், படிக்கட்டுகளில் நாய் அமைதியாகப் படுத்து கொண்டிருக்கிறது. அப்போது, மெதுவாக நடந்துவந்த சிறுத்தை, திடீரென்று பாய்ந்து நாயை கவ்வி கீழே இழுத்துவந்தது.

சிறுத்தையின் பிடியில் சிறிது நேரம் நாய் உயிர் தப்பிப்பதற்காக தவித்துக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த பாதுகாவலர், சிறுத்தையை பயமுறுத்தும் வகையில் சத்தம் போட்டதைத் தொடர்ந்து, நாயை விட்டுவிட்டு ஓடிவிட்டது. பின்னர் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத் துறைக்கு தகவல் அனுப்பட்டுள்ளது.

இது குறித்து வனத் துறை அலுவலர் சந்தோஷ் காங்க் கூறுகையில், "சிறுத்தை நடமாட்டம் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் காணப்பட்டது. சிறுத்தையை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம்" என்றார். தற்போது, நாயைக் கவ்வும் சிறுத்தையின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: 38 பேருடன் மாயமான சிலி ராணுவ விமானம்; தேடும் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details