வனப்பகுதியில் இருந்து சாலையை அவ்வப்போது மான், காட்டுயானை, புலி, சிறுத்தை கடப்பது வழக்கம். சாலையில் செல்லும் வாகனம் கவனமாக விலங்குகள் வருகிறதா என்று பார்த்துவிட்டு வாகனத்தை இயக்க வேண்டும். சிலர் வேகமாக வாகனத்தை இயக்குவதால் விலங்குகள் விபத்துள்ளாகின்றன.
சிறுத்தையை படம் பிடித்தவருக்கு நேர்ந்தது என்ன தெரியுமா? - வீடியோ வைரல்
வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி படுகாயமடைந்தது. இதையடுத்து இச்சிறுத்தையை புகைப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி படுகாயமடைந்தது. படுகாயமடைந்த சிறுத்தை மயங்கிய நிலையில் சாலையோரத்தில் படுத்திருந்தது, அதனை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் சென்றுப் பார்த்தனர். அதிலும் ஒருவர் சிறுத்தை மயங்கியிருந்ததை கண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தார். அப்போது சிறுத்தை திடீரென்று மயக்கம் தெளிந்து புகைப்படம் எடுத்த நபர் மீது பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக சிறுத்தையிடம் இருந்து அந்த நபர் தப்பித்துவிட்டார். புகைப்படம் எடுத்தவர் மீது சிறுத்தை பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து இந்திய வனத்துறை அலுவலர் பர்வீன் கஷ்வான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "சிறுத்தை படுகாயமடைந்து மயங்கியுள்ளது, அதனை புகைப்படம் எடுத்தவருக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறது அந்த சிறுத்தை. சிறுத்தை என்றாலும் அதுவும் ஒரு உயிருள்ளது தான், அதற்கேற்ற இடத்தை நாம் அளிக்க வேண்டும். யாரும் இந்த நபர் போல் இருக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.