தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லே மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல்: மும்முனை போட்டி - லடாக் யூனியன் பிரதேசம்

லே (லடாக்): அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் லடாக் தன்னாட்சி ஹில் மேம்பாட்டுக் கவுன்சில், லேவின் 26 இடங்களுக்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

லே மேம்பாட்டு கவுன்சில் தேர்தல், மும்முனை போட்டி
லே மேம்பாட்டு கவுன்சில் தேர்தல், மும்முனை போட்டி

By

Published : Oct 15, 2020, 11:43 AM IST

கடந்தாண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, லாடக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில், முதல் முறையாக லேவின் 26 இடங்களுக்கான லடாக் தன்னாட்சி ஹில் மேம்பாட்டுக் கவுன்சிலுக்கான வாக்குப்பதிவு வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக பேசிய பாஜகவின் மாவட்டத் தலைவர் நவாம்க் சமஸ்தான், “26 தொகுதிகளிலும் நாங்கள் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறோம், அவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், பிராந்தியத்தை மேம்படுத்தும் திறன்கொண்டவர்கள்.

எங்கள் கட்சியில் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் லடாக்கிற்கு அரசியல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறுகையில், "லடாக் யூனியன் பிரதேசமாக மாறியபோது, ​​நாங்கள் ஒரு சட்டப்பேரவை கோரினோம், ஆனால் அது நடக்கவில்லை. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் அதிகாரம் பெற்றால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்று நாங்கள் நினைத்தோம்.

லடாக்கில் சுமார் 95 விழுக்காடு மக்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். லே, கார்கில் ஆகிய இரு மலை கவுன்சில்களும் ஆறாவது அட்டவணையில் அதிகாரம் பெற வேண்டும். கடந்த ஆண்டில், மத்திய அரசு மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை” எனறார்.

அங்குள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஞ்சின் நம்கியால், "மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கலைக்கப்பட்டதிலிருந்து நாங்கள் இங்கு ஆம் ஆத்மி கட்சியை நிறுவினோம். மூன்றாம் தரப்பு மாற்று கட்சி லடாக்கில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

இந்தியா முழுவதும் அபிவிருத்தி அடிப்படையிலான பேச்சு எதுவும் நடைபெறவில்லை. எனவே மக்களின் தேவைகள், மேம்பாடு தொடர்பான பிரச்னைகளை இங்கு முன்னெடுக்க நாங்கள் விரும்புகிறோம். மக்கள் பிரச்னைகளுடன் தொடர்புடைய அத்தகைய வேட்பாளர்களை நாங்கள் வைத்திருக்கிறோம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details