தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதின் கட்கரி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வாக்களிப்பு! - nithin katkaeri'

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியதையடுத்து, தலைவர்கள் வாக்களிக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நிதின் கட்காரி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களிப்பு!

By

Published : Apr 11, 2019, 11:26 AM IST

Updated : Apr 11, 2019, 12:21 PM IST

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார்.

ஆந்திராவில் , மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. 2014-ல் தெலங்கானா மாநிலம் உதயமானபோது, முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெறும் தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வாக்குப்பதிவு

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வாக்கினை கடப்பா வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குசாவடியில் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வாக்குப் பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி

தெலங்கானா முதலமைச்சரின் மகளும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிசாமாபாத் தொகுதி வேட்பாளருமான கவிதா, பொத்தங்கல் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி நிசாமாபாத் வேட்பாளர் கவிதா வாக்குப்பதிவு
குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்த நிதின் கடாகரி
Last Updated : Apr 11, 2019, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details