மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக் குறைவால் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அவரது இல்லத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார்.
ராம் ஜெத்மலானிக்கு தலைவர்கள் மரியாதை! - ராம்ஜெத்மலானி
டெல்லி: மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள ராம் ஜெத்மலானி இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவு குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்திலும் நீதித்துறையிலும் சிறப்பாக செயல்பட்ட ராம் ஜெத்மலானியை இந்த நாடு இழந்துள்ளது. எந்தவொரு செயலிலும் தன்னை வெளிப்படுத்துவதில் சமரசம் செய்துகொள்ளாதவர்" என பதிவிட்டுள்ளார்.