தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமி நாராயணன் அதிருப்தி! - புதுச்சேரி

புதுச்சேரி: சபாநாயகர் பதிவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த லட்சுமி நாராயணன் தான் வகித்து வந்த முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் பதவியை துறக்க முன்வந்துள்ளது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி நாராயணன்

By

Published : Jun 6, 2019, 12:34 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானதை அடுத்து, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து, முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் சபாநாயகர் பதவிக்கு முயற்சித்து வந்தனர்.

இதனையடுத்து, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்துவிற்கு சபாநாயகர் பதிவி வழங்கப்பட்டது. இதனால் அதிர்ப்தி அடைந்த லட்சுமி நாராயணன் தான் வகித்து வந்த நாடாளுமன்ற செயலர் பதவியை துறக்க முன்வந்துள்ளார். அதன் ஒருபகுதியாக அரசு வழங்கிய காரை அவரது ஆதரவாளர்கள் சட்டசபை செயலரிடம் ஒப்படைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details