தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி' - லதா மங்கேஷ்கர் - வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

மும்பை: தன்னுடைய உடல் நலம் சரியாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று பாடகி லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

lata-mangeshkar
lata-mangeshkar

By

Published : Dec 8, 2019, 11:44 PM IST

புகழ்பெற்ற பாடகரான லதா மங்கேஷ்கர் நிமோனியாவால் பாதிப்படைந்த நிலையில், நவம்பர் 11ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் இன்று அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில், "கடந்த 28 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நிமோனியாவால் பாதிப்படைந்த என்னை, மருத்துவர்கள் உடல் நலம் குணமடைந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் படி ஆலோசனை கூறினர். இன்று வீடு திரும்பியுள்ளேன்.

லதா மங்கேஷ்கர் பதிவு

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையால்தான் நான் குணமடைந்துள்ளேன். எனக்கு மருத்துவம் பார்த்த அனைத்து மருத்துவர்களும் எனக்கு தேவதையாக தான் தெரிந்தார்கள். அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். செவிலியர்களின் சேவை பாராட்டுக்குரியது. உங்களின் அன்பு விலைமதிப்பில்லாதவை" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பத்து கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு டீசல் போட காசில்லையா?'- விளாசிய தயாரிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details