தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபாயிலிருந்து கொண்டு டெல்லியில் திருடர்களை பிடித்து கொடுத்த சாமர்த்தியக்காரர் - டெல்லி கொள்ளைச் செய்திகள்

துபாயிலிருந்து கொண்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் திருடவந்த நபர்களை வீட்டின் உரிமையாளர் சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்து கையும் களவுமாக பிடிக்க உதவியுள்ளார்.

police
police

By

Published : Sep 26, 2020, 10:36 PM IST

டெல்லியைச் சேர்ந்த முகமது இஸ்தியாக் என்பவர் தனது இந்திரா நகரில் வசிப்பவர். தனது சொந்த வேலை காரணமாக துபாய் சென்ற அவர் கரோனா பரவலை அடுத்து நீண்ட நாட்களாக இந்தியா திரும்ப முடியாமல் துபாயிலேயே இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சிலர் புகுந்துள்ளனர். அவரது வீட்டில் சிசிடிவியுடன் கூடிய பாதுகாப்பு கருவியை வைத்துள்ளார். திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தவுடன் அலெர்ட் வந்துள்ளது.

இதையடுத்து தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கு தகவலைக் கொடுத்த முகமது, அவர்களை வைத்து களவைத் தடுத்து கையும்களவுமாகப் பிடித்துள்ளார்.

மேலும், தப்பியோடிய நபர்கள் இருவரை காவலர்கள் பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்தாலும் தன் வீட்டில் நடைபெற்ற திருட்டை சாமர்த்தியமாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தியா எழுச்சிபெறும்!'

ABOUT THE AUTHOR

...view details