தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீன விவகாரத்தில் மத்திய அரசை பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்' - குலாம் நபி ஆசாத் - குலாம் நபி ஆசாத்

சீன விவகாரத்தில் மத்திய அரசை லடாக்கைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் விமர்சித்துவருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

By

Published : Jul 5, 2020, 4:01 PM IST

இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இருப்பினும், இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், சீன விவகாரத்தில் மத்திய அரசை லடாக்கைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் விமர்சித்துவருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். பாஜகவின் லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யங் செரிங் நம்கியால், லே மாவட்ட பாஜக தலைவர் டோர்ஜே அங்சுக் ஆகியோரின் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆசாத், "லடாக் பகுதிக்குள் சீனா ஊடுருவல் மேற்கொண்டு பிரச்னையை உருவாக்கியுள்ளதாக அங்சுக் தெரிவித்துள்ளார்.

அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிடாதீர்கள். சுஷுல், போப்ராங், ஹாட் ஸ்பிரிங், கல்வான் பள்ளத்தாக்கு என ஒட்டுமொத்த பகுதிக்குள்ளும் சீனா ஊடுருவல் மேற்கொண்டுள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் லுகுங் போப்ராங் தெரிவித்துள்ளார். அவர் பாங்கோங் ஏரிப் பகுதியில் பிறந்துவளர்ந்தவர். சீனா ஊடுருவல் குறித்து நம்கியால் என்ன கூறியுள்ளார் என்பதைப் பாருங்கள். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேசிய, சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர், குடியரசுத் தலைவர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details