இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் எவ்வாறு பங்கெடுத்தல் என்பது குறித்து விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின்படி நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காணொளி காட்சி மற்றும் இயந்திரங்கள் மூலம் விளக்கம் அளித்துவருகின்றனர்.
நரிக்குறவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விளக்கம் - தேர்தல் ஆணையம் - நரிக்குறவர்கள்
புதுச்சேரி: தேர்தல் ஆணையம் சார்பில் நரிக்குறவர்களுக்கு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விளக்கம் அளிக்கும் லாஸ்பேட்டை தொகுதியில் கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதிக்கு சென்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிப்பது தொடர்பாக காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தனர். இதில் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொணடனர்.இதையடுத்து நரிக்குறவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக அதே காலனியைச் சேர்ந்த சங்கர் கூறுகையில், தேர்தல் நேரங்களில மட்டுமே அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு வருகின்றனர். அப்போது குறைகளை கேட்டு செல்லும் அவர்கள் நடவடிக்கையே எடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டினர். எங்கள் சமூகத்தினர் தொழில் தொடங்க அரசு கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.