தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சசி தரூரை எதிர்க்கும் முன்னாள் ஆளுநர்?

திருவனந்தபுரம்: சசி தரூரை எதிர்த்து மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசி

By

Published : Mar 17, 2019, 2:40 PM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நான்காம் வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் களம் காண உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மத்திய அமைச்சரான சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் மிசோரம் முன்னாள் ஆளநா் கும்மண்ணம் ராஜசேகரன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு மிசோரம் ஆளுநராக பொறுப்பேற்ற கும்மண்ணம் ராஜசேகரன் மார்ச் 8ஆம் தேதி ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாகத்தான் அவர் ராஜினாமா செய்கிறாா் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அவர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடப் போவதாக வந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் நடந்த தொடர் போராட்டங்களுக்கு பிறகு பாஜக கேரளாவில் தொகுதிகளை வெல்ல கடும் பரப்புரையில் ஈடுபட்டுவரும் வேளையில் இச்செய்தி பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details