கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
கர்நாடகாவில் கடும் நிலச்சரிவு - புனே-பெங்களூரு நெடுஞ்சாலை
பெங்களூரு: புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதையொட்டி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு முதல் பெலகாவி மாவட்டத்தில் கனமழை பெய்து சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திடீரென புனே-பெங்களூரு சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பிளவு ஏற்பட்டது. இதனால், மங்களூருவிலிருந்து புனே, ஹைதராபாத், ஹூப்ளிக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு வரலாறு காணாத கனமழை பெய்யக்கூடும் எனவும், 50 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.