கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பிடிபட்டார் எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருந்து முன்கூட்டியே ஜாமீன் எடுத்திருந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை இந்த சூதாட்டம் பற்றி விசாரிக்கப்பட்டு திங்களன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
விசாரணை வெளிவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவிய அவரது மாமா மீது தமிழகத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.