இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதவி நீட்டிப்பு - டெல்லி
டெல்லி: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்30) முடிவடையும் நிலையில், அவருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
KK Venugopal Attorney General Attorney General of India Solicitor General Tushar Mehta இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் துஷார் மேத்தா டெல்லி உச்ச நீதிமன்றம்
By
Published : Jun 30, 2020, 6:45 AM IST
|
Updated : Jun 30, 2020, 8:40 AM IST
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்துவரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்30) நிறைவடைகிறது.
இந்நிலையில் அவருக்கு கூடுதலாக ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் துணை தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தாவின் பதவிக் காலமும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் துணை தலைமை வழக்குரைஞராக ( Additional Solicitor General -ASG) மூத்த வழக்குரைஞர் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு தற்போதுள்ள, ஐந்து கூடுதல் துணை தலைமை வழக்குரைஞர்களின் (ஏ.எஸ்.ஜி) பதவியை மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள அரசு கூடுதல் துணை தலைமை வழக்குரைஞர்கள் விவரம் வருமாறு:-