பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதா? என உறுப்பினர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, "நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் 28 விழுக்காடும், ஊடுருவல்கள் 43 விழுக்காடும், இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்வது 40 விழுக்காடும் குறைந்துள்ளது.
'இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது' - BJP
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் 28 விழுக்காடு குறைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிஷன் ரெட்டி
நம் பாதுகாப்புத்துறையின் தொடர் முயற்சிகளால் காஷ்மீர் 2018 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாற்றம் கண்டுள்ளது. எல்லையில் நடக்கும் ஊடுருவல்களுக்கு எதிராக அரசு சிறிதளவு கூட சகிப்புத்தன்மை காட்டாது" என்றார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்ற நிலையில், மத்திய இணையமைச்சர் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.