தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கிரண்பேடி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார்" நாராயணசாமி குற்றச்சாட்டு! - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

புதுச்சேரி: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்க விடாமல் அரசின் கோப்பை திருப்பி அனுப்பி கிரண்பேடி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Sep 5, 2020, 7:19 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேவையான உபகரணங்களை பெற்று பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான நிதியை மாநில அரசு வழங்கும்.
கரோனா நோய்த்தொற்றை கண்டறிய வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது, முகாம்கள் அமைத்து பரிசோதனை கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையம் மூலம் பரிசோதனை என பரிசோதனை செய்ய புதுச்சேரியில் 12 மையங்களில், தற்போது பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்க விடாமல், அரசின் கோப்பை திருப்பி அனுப்பி கிரண்பேடி அநீதி இழைப்பதாகவும் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார். ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அரசுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் துணைநிலை ஆளுநர்.

மத்திய அரசு ஒத்துக் கொண்டபடி ரூ 1,800 கோடி வழங்குவதற்குப் பதிலாக ரூ 520 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இப்பேரிடர் காலத்தில் இது போன்று புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறிய முதலமைச்சர் மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எந்த திட்டத்தையும் அரசு நிறுத்தவில்லை. பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவை ஒழிக்க முடியாது. ஆதலால் பொது மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details