காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பூ - குஷ்பூ விலகல் கடிதம்
09:47 October 12
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, குஷ்பூ அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தனக்கு செய்தித்தொடர்பாளர் பதவியையும், முன்னிலை உறுப்பினராகவும் இருந்து பணியாற்ற வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்ற வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.