நாடும் முழுவதும் கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதே கேரளாவில் குழந்தை ஒன்று யானையோடு நெருங்கி பழகிவரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உமா தேவி என்னும் யானையை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் என்பவர் வாங்கி வளர்த்துவருகிறார்.
அந்த யானையோடு அவர் மகள் பாமா, அன்போடு பழகி விளையாடி வரும் வீடியோவை மகேஷ் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது. யானையோடு நடந்துவருவது, அதற்கு உணவு அளிப்பது என அக்குழந்தை மழலைத்தன்மையோடு செய்யும் காட்சிகள் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
கேரளாவில் யானையோடு பழகும் மழலை குழந்தையின் வைரல் வீடியோ இந்த வீடியோ வைரலாகும், இவ்வளவு பேர் இதனை ரசிப்பார்கள் என்று தான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'யானைக்கு யாரும் வெடி வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை வழங்கவில்லை'