தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் கேரளாவில் சிக்கிய தாய், குழந்தை - சொந்த நாடு திரும்ப ஏற்பாடு! - மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த ஜென்னே

திருவனந்தபுரம் : கரோனா ஊரடங்கால் இந்தியாவில் சுமார் ஆறு மாதங்களாக சிக்கித் தவித்த லைபீரிய நாட்டைச் சேர்ந்த தாயும் மகனும் மும்பை வழியாக சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.

கயோனா
கரா

By

Published : Sep 1, 2020, 3:59 PM IST

மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டைச் சேர்ந்த ஜென்னே பேய், தனது இரண்டரை வயது மகன் ஜினினின் இதய சிகிச்சைக்காக கடந்த மார்ச் 2ஆம் தேதி கொச்சிக்கு வந்துள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். பின்னர், மார்ச் 12ஆம் தேதியன்று, ஜினினுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மேலும், அயோட்டா நுரையீரல் சாளரத்தில் துளை ஒன்று அறுவை சிகிச்சை மூலம் சீல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி லைபீரியா புறப்பட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரோனா காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் ஜென்னேவால் சொந்த ஊர் திரும்ப இயலாமல் போனது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அங்கேயே தங்க முடிவெடுத்த ஜென்னே, சுமார் ஆறு மாதங்களாக தனது மகன் ஜினின் உடன் மருத்துவமனையிலேயே தங்கி வந்தார். கரோனாவால் இந்தியாவில் சிக்கிக் கொண்ட தாயும் மகனும் மருத்துவமனை நிர்வாகத்தின் கனிவான கவனிப்பில் இருந்து வந்தனர்.

கரோனா ஊரடங்கால் ஆறு மாதங்களாக கேரள மருத்துவமனையில் தங்கியிருந்த லைபீரிய தாய், மகன்.

இந்நிலையில் ஜென்னேவின் கணவர், வருகிற செப்டம்பர் ஆறாம் தேதி, தன் மனைவியும் மகனும் மும்பை வழியாக சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதனைத் தொடர்ந்து, சொந்த நாட்டிற்கு புறப்பட்ட ஜென்னேவுக்கும், ஜினினுக்கும் ஓணம் பண்டிகையை ஒட்டி சுவையான கேரள உணவுகளைப் பரிமாறி மருத்துவமனை ஊழியர்கள் அன்புடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details