கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 'கூடத்தாயி' என்ற கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 2002-2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த ஜாலி ஷாஜூ என்பவர்தான் உயிரிழந்த உறவினர்களுக்கு, உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.