துபாயிலிருந்து 184 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஐஎக்ஸ்- 1344 ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) இரவு தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில், விமானிகள் இருவர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க கேரள காவல்துறை 30 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
கேரள விமான விபத்து குறித்து விசாரிக்க 30 பேர் கொண்ட விசாரணை குழு!
திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து விசாரிக்க 30 பேர் கொண்ட குழுவை கேரள காவல்துறை உருவாக்கியுள்ளது.
கேரள விமான விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 30 பேர் கொண்ட விசாரணை குழு
மலப்புரம் கூடுதல் எஸ்பி சாபூ தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவிற்கு மலப்புரம் எஸ்பி ஹரிதாசன் தலைமை விசாரணை அலுவலராக உள்ளார். மேலும், இக்குழுவில், பெரிந்தல்மண்ணா ஏஎஸ்பி ஹேமலதா, ஆய்வாளர் சிபு, கே.எம் பிஜூ, சுனேஸ் ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க:கோழிக்கோடு விமான விபத்து : விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு