குரங்குகளின் உடலில் மேயும் சில வகை உண்ணிகளால் மனிதருக்குப் பரவும் நோய், 'கியாசனூர் வன நோய்'. இது ' குரங்குக் காய்ச்சல்' என்றும் அழைக்கப்படுகிறது.
இதனிடையே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மன்னதாவடி பகுதியைச் சேர்ந்த மீனாக்ஷி என்ற 50 பெண் இந்தக் குரங்குக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், மருத்துவம் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த வகை காய்ச்சலால் மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.