கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் கே.எம். பஷீர் (35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவர் அந்தப் பகுதியில் உள்ள மியூசியம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்புறம் வேகமாகவந்த கார் ஒன்று பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் காரை ஓட்டிவந்தவரும் படுகாயமடைந்தார்.
காரை ஓட்டிவந்தவர் ஐஏஎஸ் அலுவலர் ஸ்ரீராம் வெங்கட்டரமன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஸ்ரீராம் வெங்கட்டரமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.