தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவுக்கு ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு - கேரள நிதி அமைச்சர் தாமஸ் இசாக்

திருவனந்தபுரம்: புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக முழு அடைப்பு அமலில் இருப்பதால் மாநிலத்திற்கு ரூ.55 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் இசாக் தெரிவித்தார்.

thomas issac coronavirus lockdown coronavirus கேரளாவுக்கு ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு கேரள நிதி அமைச்சர் தாமஸ் இசாக் கேரளா நிதி பாதிப்பு, கேரளாவில் கரோனா பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு, ஆலோசனை
thomas issac coronavirus lockdown coronavirus கேரளாவுக்கு ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு கேரள நிதி அமைச்சர் தாமஸ் இசாக் கேரளா நிதி பாதிப்பு, கேரளாவில் கரோனா பாதிப்பு, கோவிட்-19 பாதிப்பு, ஆலோசனை

By

Published : Apr 13, 2020, 12:33 PM IST

கேரள நிதியமைச்சர் தாமஸ் இசாக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “காலம் கடந்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் மத்திய அரசு அனைத்து நிதி உதவிகளையும் மாநிலத்திற்கு வழங்க முன்வர வேண்டும்.
நாங்கள் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளோம். ஏனென்றால், மக்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் எந்த தூரத்திற்கும் செல்ல தயாராக இருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது, நாங்கள் வட்டி விகிதத்தைப் பற்றி பார்ப்பதில்லை.

ஆகவே மத்திய அரசு தற்போது பேசுவதை நிறுத்திக்கொண்டு செயல்பட வேண்டும். நாங்கள் கடன் வாங்கி, எல்லாவற்றையும் எங்கள் மக்களுக்கு கொடுக்கிறோம்.
நாங்கள் எல்லா வகையிலும் மக்களுக்கு உதவுவதைப்போல் மற்ற மாநிலங்கள் செய்யவில்லை. எனவே மத்திய அரசு எங்களுக்குடைய நிதியை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலத்திற்கு ரூ.55 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் பெற்று எங்களுக்கு கொடுக்க வேண்டும். பூட்டுதலுக்கு (லாக்டவுன்) பிறகு மாநிலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அமைச்சரவை திங்கட்கிழமை (ஏப்ரல்13) கூடும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details