தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள ஆளுநருக்கு மாணவர்கள் எதிர்ப்பு - CAA

திருவனந்தபுரம்: கேரள ஆளுனர் ஆரீப் முகமது கானுக்கு வழக்கத்துக்க மாறாக கேரளாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Kerala Guv faces protests from delegates at Indian History Congress over CAA
Kerala Guv faces protests from delegates at Indian History Congress over CAA

By

Published : Dec 28, 2019, 8:56 PM IST

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த காங்கிரஸ் வரலாற்று அமர்வில் மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தங்களது கைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பின்னர் காவலர்களால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், “உங்களுக்கு போராட அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் என்னை நோக்கி கத்த வேண்டாம். பேச்சுரிமை மற்றும் விவாதத்தின் கதவுகளை நீங்கள் அடைத்து வன்முறை கலாசாரத்தை பரப்ப வேண்டாம்.
இந்தப் பிரச்னையை நீங்கள் எழுப்பாமல் இருந்திருந்தால் நான் இதுபற்றி பேசியிருக்க மாட்டேன். நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பேன் என்று நான் உறுதி அளித்துள்ளேன்.” என்றார்.

ஆளுநரின் உரைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தனர். மேலும், ஆளுநர் தனது உரையை நிறைவு செய்த தருணத்தில், “அவமானம், அவமானம்” என்று மாணவர்கள் கத்தினர்.

கேரள ஆளுனருக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எதிர்ப்பு.!
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை - அசாதுதீன் ஓவைசி!

ABOUT THE AUTHOR

...view details