கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தலில், அம்மாநில அமைச்சர் கே.டி. ஜலீல்லுக்கு தொடர்பு உள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக பெரும் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் என புகார் எழுந்துள்ளது. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலானாய்வு முகமை, சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு அனுமதி தர நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளை, சந்தீப் நாயர், முகமது அலி, முகமது ஷபி ஆகியோரை வரும் 18ஆம் தேதிவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலானய்வு முகமை (என்ஐஏ) ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம், 982.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங்