தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை - கேரள நிதியமைச்சர் - விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர். பி. ஐ அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை

திருவனந்தபுரம்: ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

Issac
Issac

By

Published : Apr 18, 2020, 12:21 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, செய்தியாளர்களை (ஏப்ரல் 17) நேற்று சந்தித்த ஆர்.பி.ஐ. ஆளுநர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பாதிப்புகளைச் சரிசெய்ய மாநில அரசுகள் 60 விழுக்காடுவரை கூடுதலாகக் கடன் பெறலாம், விவசாயம், சிறு, குறு தொழில்செய்வோர் ஆகியோருக்கு கடன் வழங்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டுவசதி வங்கி (என்.ஹெச்.பி.), சிறுதொழில் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன.

ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கேரளாவிற்கு 729 கோடி ரூபாய் நிதி கடனாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை விரைவாக திருப்பி செலுத்த வேண்டும். மூன்று மாதத்திற்கான வட்டி செலுத்த வேண்டும் என்பதால் இதில் பயன் ஏதுமில்லை.

சிறு வணிகர்களுக்கான கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இதனை மத்திய அரசு ஏற்க வேண்டும். மத்திய அரசு அளிக்கும் கடனை மூன்று விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாக உயர்த்த வேண்டும். இதனால், 18,000 கோடி நிதியை கேரளா பெரும். விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

இதையும் படிங்க: ராமோஜிவ் ராவ் சேவை தனித்துவமானது - சிரஞ்சீவி

ABOUT THE AUTHOR

...view details