கேரளாவில் யானை கொல்லப்பட்டது குறித்து பாஜக கட்சியின் மூத்த தலைவரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி தனது ட்விட்டரில், "இந்தியாவிலே அதிக அளவில் வன்முறைகள், குற்றச் செயல்கள் நடக்கக் கூடிய மாவட்டம் மலப்புரம்தான். அந்த யானை கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது.
அம்மாவட்டம் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெயர்போனது. யானையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை அதற்கு காராணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய மலப்புரத்தில் அவர்களை குறிவைத்து பேசியதாக கூறப்படும் மேனகாவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதாலா மேனகா காந்தி தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.