திருவனந்தபுரம்:ராஜிவ்காந்தி உயிரி தொழிநுட்ப மையத்தில் புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான சிக்கலான நோய்களுக்கென தனியாக கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வால்கர் பெயர் வைக்க முடிவுசெய்துள்ளது குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தணுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கேரள முதலமைச்சர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், புதிய கட்டட வளாகத்திற்கு புதிய இந்திய விஞ்ஞானியின் பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பினராயில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜிவ்காந்தி உயிரி தொழிநுட்ப மையத்தில் கட்டப்பட்டுள்ள வளாகத்திற்கு 'ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வல்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்று நோய்களுக்கான மையம்' என்று பெயரிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு முதன்மை ஆராய்ச்சி நிறுவனம், இது அரசியலுக்கு அப்பாற்பட்டது.