தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.200 கடனை அடைக்க கடல் கடந்து வந்த கென்யா அமைச்சர் - அவுரங்காபாத்

மும்பை: 34 வருடத்திற்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைக்க கென்யா அமைச்சர் கடல் கடந்து வந்து கடனை அடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.200 கடனை அடைக்க கடல் கந்து வந்த கென்யா அமைச்சர்!

By

Published : Jul 10, 2019, 3:00 PM IST

கென்யா வெளியுறவுத் துறை அமைச்சர் ரிச்சர்ட் டாங்கி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மவுலனா கல்லூரியில் 34 வருடத்திற்கு முன்னதாக படித்துள்ளார். அப்போது வான்கேடேநகரில் வசித்து போது அங்குள்ள கவாலி குடும்பத்தினர் கடையில் ரூபாய் 200க்கு பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் அப்போது அவர் கையில் பணம் இல்லாததால், பிறகு தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கும் அந்த கடைக்காரர் சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் 34 வருடத்திற்கு பிறகு கென்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இந்தியா திரும்பி வந்த ரிச்சர்ட், அவுரங்காபாத்தில் கவாலி குடும்பத்தை 2 மணி நேரமாக தேடியுள்ளனர். கடைசியாக கவாலி குடும்பத்தை கண்டுபிடித்த ரிச்சர்ட் டாங்கி ரூ.200 கடனை கொடுத்துள்ளார். அப்போது காசிநாத் கவாலி பணத்தை வாங்க மறுத்துள்ளார். பின்னர் ரிச்சர்ட் வேண்டுகொளுக்கிணங்க ரூ.200 வாங்கி கொண்டார்.

ரூ.200 கடனை அடைக்க கடல் கந்து வந்த கென்யா அமைச்சர்!

இது குறித்து ரிச்சர்ட் டாங்கி கூறுகையில், ‘நான் இந்தியாவில் படிக்கும் போது பணம் இல்லாத நேரத்தில் கவாலி குடும்பம் தான் எனக்கு உதவியது. அவர்கள் உதவியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு இது ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது’ எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details