பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலோ அல்லது தேர்வுத்தாளை மறு சீராய்வு செய்ய வேண்டுமென நினைத்தாலோ மாணவர்கள் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய நிலை தெலங்கானாவில் இருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உயர் அலுவலர்களுடன் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தையடுத்து பொதுத்தேர்வு விதிகள் குறித்த அதிரடி மாற்றங்கள் குறித்து பேசினார்.
அதன்படி, இதுவரை பொதுத்தேர்வு வினாத்தாள் மறுசீராய்வு மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இனிமேல் அதுபோல் சிறப்புக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.