புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா முழுவதும் காஷ்மீரிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்துவரும் வேளையில் அம்மாநில இளைஞர்கள் புதுவிதமான கஃபே திறந்து தங்கள் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீரிகளின் புதிய முயற்சி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் இளைஞர்கள் புது விதமான கஃபே திறந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீர்
பொதுவாக, காஷ்மீர் என்றாலே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்துவருகிறது. இதனை மாற்றும்வகையில் அம்மாநில இளைஞர்கள் செய்த இந்த செயலை மற்றவர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
முக்கியமாக காஷ்மீரின் இளம் தலைமுறையினர் பெரிய அளவில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவெளியாகும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அம்மாநில இளைஞர்களின் இந்த புதிய செயல் மற்றவர்களுக்கு உந்துதலாகஇருப்பதாக தெரிகிறது.