தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் நாத்திகன் சரண்! - கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம்

புதுச்சேரி: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் நாத்திகன் என்ற சுரேந்தர் நடராஜன் அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன்
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன்

By

Published : Jul 16, 2020, 6:11 PM IST

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் 'ஆபாச புராணம்' எனும் பெயரில் கந்த சஷ்டி கவசத்தைக் கேவலமாகச் சித்தரிக்கப்பட்ட காணொலி வெளியிடப்பட்டுள்ளதாக என பாஜகவினர் சென்னை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் யூடியூப் சேனல் உரிமையாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்னும் சுரேந்தர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரியிருந்தார்.

வேனில் அழைத்துச் செல்லப்பட்டபோது

இந்நிலையில், அவர் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பெரியார் படிப்பகத்தில் சரணடையக் காத்திருந்தார். தகவலறிந்த சென்னை குற்றப்பிரிவு காவல் உதவிக் கண்காணிப்பாளர் சரவணகுமார், துணை ஆய்வாளர் வீராசாமி ஆகியோர் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரைக் கைதுசெய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன்

இதற்கிடையில் ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "என் மீது திட்டமிட்ட அரசியல் சதியால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே போட வேண்டியது. ஆனால், திடீரென்று வழக்கு போடுவதற்கு காரணம் நான் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்பட்டதுதான். வழக்கை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்" என்றார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதையும் படிங்க:'கருப்பர் கூட்டம் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதி' - அமைச்சர் சி.வி. சண்முகம்!

ABOUT THE AUTHOR

...view details