கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த ஊரடங்கு நேரத்தைச் சிறப்பாக பயன்படுத்தி கொண்டு குடிநீர் பாட்டில், சமையல் எண்ணெய் கேன் ஆகிய ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்பொருள்களை சேமித்து மறுசுழற்சி செய்து அதனை பறவைகள் தங்குவதற்கு சிறிய அளவிலான கூடுகளை செய்வதோடு வண்ண பூந்தொட்டிகளாகவும் செய்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில், ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்து இவர் செய்த பூந்தொட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.