தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆண்களோடு உறங்குவதில்லை: கர்நாடக சபாநாயகர் சர்ச்சை பேச்சு - கே ஆர் ரமேஷ்குமார்

பெங்களூரு: நான் ஆண்களோடு உறங்குவதில்லை. எனக்கு சட்டபூர்வமாக ஒரு மனைவி இருக்கிறாள் என கா்நாடக சபாநாயகர் கே ஆர் ரமேஷ்குமார் சர்ச்சையாக பேசியுள்ளார்.

ரமேஷ்குமார்

By

Published : Mar 22, 2019, 5:50 PM IST

28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இதனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே எச் முனியப்பாவுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த கே ஆர் ரமேஷ்குமார் என்பவருக்கும் மக்களவைத் தேர்தலில் சீட் கிடைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பேசிய கே எச் முனியப்பா, "நானும், ரமேஷ்குமாரும் கணவன், மனைவியை போன்றவர்கள். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எங்களுக்குள் வாக்குவாதம் பொதுவாக நடைபெறும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், கர்நாடக மாநில சபாநாயகருமான கே ஆர் ரமேஷ்குமார், நான் ஆண்களோடு உறங்குவதில்லை. எனக்கென்று சட்டபூர்வமாக ஒரு மனைவி இருக்கிறாள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details