கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் பல கருத்துகளை கூறி வந்தனர். இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டது.
டி.கே.சிவக்குமார் கைது எதிரொலி: கையில் தீப்பந்தத்துடன் போராட்டம் - karnataka protest
கர்நாடகா: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்
இதனையடுத்து, கர்நாடகாவில் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டாக அறிவித்தன. போராட்டக்காரர்கள் சாலையில் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
கர்நாடகாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போக்குவரத்து பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் இயக்கப்படமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கையில் தீப்பந்தங்களை ஏந்தி கொண்டு போராட்டங்களை ஈடுபட்டனர்.