கார்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர், பாஜகவிற்குள் பிளவை ஏற்படுத்த ரகசியக்கூட்டம் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடியூராப்பாவிற்குத் தெரியாமல் நடந்த இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடியூரப்பா உறுதியளித்துள்ளார். இருந்தபோதிலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவரின் பேச்சை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரகசியக் கூட்டம் நடத்தும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: கர்நாடக பாஜகவில் பிளவு! - கர்நாடாக பாஜக பிளவு
பெங்களூர்: பாஜகவின் மூத்த எம்.எல்.ஏக்களான உமேஸ் காதி, முருகேஷ் நிரானி, பாசன்கௌவுடா உள்ளிட்டோர் ரகசியக் கூட்டம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசியக் கூட்டம் நடத்தும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: கர்நாடாக பாஜகவில் பிளவா?
முன்னதாக, பிப்ரவரியில் எடியூரப்பாவின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பாஜக மூத்த தலைவரும், தொழிற்துறை அமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டரின் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரளாவில் தொடங்கியது ஆன்லைன் மது விற்பனை...! அரசு கட்டுப்பாடுகளில் திணறும் மதுப் பிரியர்கள்...!