கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் ஷிர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் முகமது சலீம் (38). இவர் மனைவி, மகளுடன் சவுதி அரேபியாவின் தம்மம் பகுதியில் வசித்து வந்தார். இருப்பினும், ஆகஸ்ட் 3ஆம் தேதி சலீம் தனது மனைவியையும் மகளையும் தம்மத்தில் விட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் மும்பைக்கு வந்தார்.
மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து - கணவர் கைது - முத்தலாக்
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மூன்று முறை தலாக் எனக்கூறி மனைவியை விவாகரத்து செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சலீம் மனைவி தனது முகநூல் பதிவில், மூன்று தலாக் என்று சலீம் உச்சரித்ததாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், காவல் துறையினர் தலாக் உச்சரிப்பதன் மூலம் விவாகரத்து செய்வதை தடைசெய்யும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் -2019இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சலீம் மும்பையில் இருந்து ஷிர்வாவுக்கு வந்த பிறகு, காவல் துறையினர் அவரை கைது செய்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சலீமை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.